தேனி- ஊரடங்கு காலத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் பணிகள் பாதிப்பு

தேனி மாவட்டத்தில் ஊரடங்கால். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வினால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2021-05-28 04:59 GMT

தேனி மாவட்டத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வினால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்தொற்றின் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே நடைபெற்று வரும் கட்டுமான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நிலையில், கட்டுமான பொருட்களின் கடும் விலை உயர்வினாலும், பொருள்களின் தட்டுப்பாட்டின் காரணமாகவும், ஏற்கெனவே நடைபெற்று வந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு செங்கல் ஒன்றுக்கு ரூ.7 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.9.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சிமெண்ட் விலையும் உயர்ந்துள்ளது. இதில் மாருதி ரூ.330 லிருந்து ரூ.405 -க்கும், டால்மியா டிஎஸ்பி ரூ.425 இருந்து ரூ.480 -க்கும், ராம்கோ ரூ.410 லிருந்து 490-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பத்து அடி உயரம் உள்ள சவுக்கு மரம் மரம் சவுக்கு மரம் மரம் உள்ள சவுக்கு மரம் மரம் சவுக்கு மரம் மரம் ஒரு லோடு (எண்ணிக்கை -100) ரூ.4,500 -ல் இருந்து ரூ.6,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் கட்டுமான தொழிலை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

Tags:    

Similar News