தேனி : கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வு

கொட்டகுடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான இடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-06-16 15:48 GMT

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள கொட்டகுடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான இடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொட்டகுடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதற்கு திட்ட வரைவு தயாரிப்பதற்காக மதுரை கோட்டத்தில் உள்ள தலைமைபொறியாளர் சௌந்தர் தலைமையில், உதவி பொறியாளர்கள் முத்துமாணிக்கம், ராஜேஷ்குமார், நடராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். முன்னாள் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் உடனிருந்தார்.

போடியில் இருந்து குரங்கணி செல்லும் சாலையில், கொம்புதூக்கி அய்யனார் திருக்கோவில் அருகே உள்ள கொட்டகுடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கொட்டகுடி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்காக, கொம்புதூக்கி அய்யனார் கோயில் பகுதி, அடகுபாறை விலக்கு, முந்தல் கிராமத்திற்கு அருகில் என மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News