தேனி : விவசாயி மர்ம மரணம்- போலீசார் விசாரணை.

போடிநாயக்கனூரில் ரத்த காயங்களுடன் விவசாயி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.;

Update: 2021-06-04 14:12 GMT

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் ரத்த காயங்களுடன் விவசாயி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

போடிநாயக்கனூர் மேலத்தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் நாகராஜ், இவர் மாங்காய் விவசாயி ஆவார். போடி அருகே உள்ள சிறைக்காடு என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாங்காய் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் காலை தோட்டத்துக்கு சென்றவர், மாலை வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் தோட்டத்திற்கு தேடி சென்றனர். அப்போது ரத்த காயங்களுடன் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் சடலமாக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து சென்ற போடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் குரங்கணி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

          .

Tags:    

Similar News