தேனி: மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத் தீ

மேற்கு தொடர்ச்சி மலையில், பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர்.;

Update: 2021-06-19 13:35 GMT

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

போடிநாயக்கனூர் சரகத்திற்கு உட்பட்ட, கொட்டகுடி பீட் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயினால் விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகைகள் தீயில் கருகி சேதமடைந்தன.

மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போடி வனசரக அலுவலர் நாகராஜ் தலைமையில், வனவர் முருகன் மற்றும் சுமார் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கரடுமுரடான உயர்ந்த மலைகளில் காட்டு தீ பற்றி எரிவதால், தீயை கட்டுப்படுத்து வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

Tags:    

Similar News