தேனியில் அனுமதியின்றி செயல்பட்ட குளிர்பான நிறுவனத்திற்கு சீல்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிறுவனத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2021-05-29 11:44 GMT

அனுமதியின்றி செயல்பட்ட குளிர்பான கம்பெனிக்கு அதிகாரிகள் சீல் வைக்கின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு, நாடார் தெரு பகுதியில் அனுமதி இன்றி குளிர்பான நிறுவனம் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசன், சுகாதார ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை செய்தனர்.

சோதனையில் அனுமதியின்றி குளிர்பான நிறுவனம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள் நிறுவனத்தை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

Similar News