தேனியில் 500ஐ நெருங்கிய கொரானோ -பீதீயில் பொது மக்கள்

தேனி மாவட்டத்தில் 40க்கு மேற்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு.

Update: 2021-04-18 14:54 GMT

கொரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தேனி மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரை மாவட்டத்தில் 495 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உள்ள பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளாட்சி நிர்வாகம் அறிவித்து பொதுமக்கள் யாரும் அப்பகுதிகளுக்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தேனி நகரின் முக்கிய பகுதியாக கருதப்படும் என்.ஆர்.டி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது குழந்தை, 15 வயது சிறுவன் மற்றும் 41 வயதுள்ள தாய் என மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தேனி -அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பாக தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அப்பகுதிக்கு யாரும் செல்லாதவாறு இருபுறமும் தடுப்புகள் அமைத்து வருகின்றனர்.

மேலும் சுகாதாரத்துறை சார்பாக தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் போடி, கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 40 க்கு மேற்பட்ட இடங்களை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News