சர்வதேச கபாடி போட்டியில் வெற்றி தேனி இளைஞர்களுக்கு பாராட்டு

சர்வதேச கபாடி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற தேனி இளைஞர்களுக்கு கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்

Update: 2021-10-11 13:30 GMT
சர்வதேச கபாடி போட்டியில் வெற்றி பெற்ற தேனி இளைஞர்களை கலெக்டர் முரளீதரன் பாராட்டினா்ர்.

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச கபாடி போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணியில் இடம் பெற்றிருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு கலெக்டர், எஸ்.பி., வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக கபாடி அணியில் 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில், தேனி மாவட்டம், எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த 4 இளைஞர்கள், கண்டமனுாரை சேர்ந்த 3 இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த மாதம் பஞ்சாபில் நடைபெற்ற, அகில இந்திய அளவிலான கபாடி போட்டியில் முதல் பரிசு பெற்றிருந்தனர். பின்னர் நேபாளத்தில் நடைபெற்ற அகில உலக அளவிலான கபாடி போட்டியில் நேபாள அணியினை வீழ்த்தி முதல் பரிசு பெற்றனர்.


அதேபோல், தமிழகத்தை சேர்ந்த 19 வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கான கபாடி அணியில் எருமலைநாயக்கன்பட்டி அணியை சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியும் நேபாளத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கபாடி போட்டியில் முதல் பரிசை பெற்றது. எனவே எருமலைநாயக்கன்பட்டி கிராமத்தையும், கண்டமனுார் கிராமத்தையும் சேர்ந்த கபாடி இளைஞர்களை,

தேனி கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் ஆகியோர் அழைத்து பாராட்டினர். எருமலைநாயக்கன்பட்டி தலைவர் பால்ராஜ்,  உதவியாளர் பாண்டியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News