வருமுன் காப்போம் முகாம் தொடக்கம்: வாரம் 24 முகாம்கள் நடத்த ஏற்பாடு
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தில், வரும்முன் காப்போம் முகாமை, கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.;
தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம் கிராம ஊராட்சியில், இன்று வருமுன் காப்போம் முகாமினை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார். பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், சுகாதார துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கவேல், ஜெயமங்கலம் ஊராட்சி தலைவர் அங்கம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த திட்டத்தின் மூலம், ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் வாரம் மூன்று நாட்கள் முகாம் நடத்தப்படும். மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் வாரம் 24 நாட்கள் முகாம் நடத்தப்படும். இந்த முகாம்களில் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சுகாதாரத்துறையே அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.