இருசக்கர வாகனத்தில் 225 கி.மீ தொலைவு பயணம்: தேனியில் உயிரைப்பறித்த விபத்து

நெடுந்தொலைவு பயணம் செய்ததால், ஏற்பட்ட களைப்பில் டூ வீலரை கட்டுப்பாடி இயக்கியதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது;

Update: 2021-11-03 17:15 GMT

பைல் படம்

திருப்பூரில் இருந்து 225 கி.மீ., துாரம் டூ வீலரில் மனைவி, மகனுடன் வந்தவர் தேனியில் பைபாஸ் ரோட்டில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது 3 வயது மகனும் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் மணி ( 26.) இவர் தனது மனைவி கவுசல்யா( 22,) மகன் விபூசன்( 3,) ஆகியோருடன் இன்று திருப்பூரில் இருந்து தேனிக்கு டூ வீலரில் வந்து கொண்டிருந்தார். தேனியில் அல்லிநகரத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் பைபாஸ் ரோட்டில் அனுமந்தன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஆதிபட்டி அருகே சென்ற போது ரோட்டோரம் நின்றிருந்த பிக்கப்வேன் மீது டூ வீலர் மோதியது. இதில் மணியும், விபூசனும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கவுசல்யா பலத்த காயத்துடன் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் பழனிசெட்டிபட்டி போலீசார், திருப்பூரில் இருந்து டூ வீலரில் மனைவி, மகனுடன் பயணம் செய்ததால், ஏற்பட்ட களைப்பில் டூ வீலரை கட்டுப்பாடு இன்றி இயக்கியதே இருவர் சாவுக்கு காரணமாக அமைந்து விட்டது என தெரிவித்தனர்.

Tags:    

Similar News