காமாட்சிபுரம் கிராமசபை கூட்டத்தில் கண்கலங்கிய தேனி மாவட்ட கலெக்டர்

காமாட்சிபுரம் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற தேனி கலெக்டர் முரளீதரன் குழந்தை திருமணம் வேதனை அளிப்பதாக கூறி கண்கலங்கினார்.

Update: 2021-10-02 11:00 GMT

தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் துாய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் முரளீதரன் குப்பைகளை சேகரித்தார்.

தேனியில் துாய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து, குப்பைகளை அகற்றிய கலெக்டர் முரளீதரன் காமாட்சிபுரம் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசும் போது கண் கலங்கினார்.

தேனியில் இன்று காந்திஜெயந்தியை தொடர்ந்து கதர் அங்காடிகளில் 30 சதவீதம் தள்ளுபடி விற்பனையினை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார். பின்னர் புதிய பஸ்ஸ்டாண்டில் தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். துாய்மை இந்தியா திட்டத்தையும் தொடங்கி வைத்து, அரைமணி நேரம் பஸ்ஸ்டாண்ட் முழுக்க சுற்றி குப்பைகளை சேகரித்து அகற்றினார்.

பின்னர் சின்னமனுார் ஒன்றியம் காமாட்சிபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனார். அப்போது பேசும் போது, 'தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது தனக்கு பெரும் வேதனை அளிக்கிறது. இதனை நுாறு சதவீதம் தடுத்து நிறுத்தும் வரை ஓயமாட்டேன்' எனக்கூறி கண்கலங்கினார். அங்கிருந்த மக்கள், கலெக்டரின் எண்ணப்படி குழந்தை திருமணத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News