பி.எஸ்.என்.எல்.சிக்னல் பழுது: 50 மலை கிராமங்களுக்கு தொலை தொடர்பு துண்டிப்பு

தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு தகவல் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-13 09:30 GMT

தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக இப்பகுதியில் உள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தகவல் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், மயிலாடும்பாறை, வருஷநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல்., மூலம் மட்டுமே மொபைல் போன் மற்றும் வில்போன் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. மேகமலை வனப்பகுதிக்குள் உள்ள கிராமங்கள் என்பதால் பிற தனியார் நிறுவன சேவைகள் இப்பகுதியில் இன்னும் அனுமதிக்கப்படவி்ல்லை. 

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மயிலாடும்பாறை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. இதனால் ஒரு வாரத்திற்கும் மேலாக இங்கிருந்து கிடைக்கும் சிக்னல் மூலம் தகவல் தொடர்பு வசதிகள் பெற்ற ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பழுது நீக்கும் பணிகளை விரைந்து முடித்து இப்பகுதிகளில் சிக்னல் எளிதாக கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மலைக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News