பெரியகுளத்தில் மருந்துக் கடையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் திருடு போனது
பெரியகுளத்தில் உள்ள மருந்துக் கடையில் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் திருடு போனது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
பெரியகுளம் காந்திசிலை அருகே வசிப்பவர் மோகன், 55. இவர் தனது வீட்டின் பின்புறம் திண்டுக்கல் மெயின் ரோட்டோரம் மருந்துக் கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு வீடு திரும்பினர். இன்று காலை கடை திறக்க சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
உள்ளே திறந்து பார்த்த போது, கல்லாவில் இருந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. மோகன் பெரியகுளம் போலீசில் புகார் செய்தார். பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.