மகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியரை கைது செய்த தேனி மகளிர் போலீசார்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை தேனி மகளிர் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-07-29 02:15 GMT

ஆசிரியர் மகேந்திரன்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மகேந்திரன், (வயது 58). இவருக்கு திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் முடித்திருந்தார். அந்த பெண்ணுக்கு பதினேழு வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில், மகள் உறவுமுறை கொண்ட அந்த சிறுமியிடம் ஆசிரியர் மகேந்திரன், மொபைல் போனில் ஆபாச படங்களை காட்டியுள்ளார். அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது தொடர்பாக இரண்டாவது மனைவி தேனி மகளிர் போலீசில் புகார் செய்தார். தேனி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் மகேந்திரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News