பெரியகுளத்தில் சுற்றித்திரியும் மனநாேயாளிகள்: நடவடிக்கைக்கு பாெதுமக்கள் காேரிக்கை

பெரியகுளத்தில் மனநோய் பாதிக்கப்பட்டவர்களால் பொதுமக்களுக்கு பெரும் ்இடையூறு ஏற்பட்டு வருகிறது.

Update: 2021-10-16 07:13 GMT

பெரியகுளத்தில் சுற்றித்திரியும் மனநோயாளிகள்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மனநோயாளிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவர்கள் பொதுமக்கள், பெண்களுக்கு பெரும் தொல்லையாக மாறி வருகின்றனர். ரோட்டில் செல்லும் பெண்களின் மீது உரசுவது போல் மிக நெருக்கமாக வந்து நடிக்கின்றனர். அப்போது பெண்கள் அறுவெறுப்புடன் அலறி ஓதுங்குகின்றனர். ஆண்கள் டீக்கடைகளில் வடை சாப்பிட்டால் உடனே வந்து கையேந்துகின்றனர். தர மறுத்தால் பறித்து விடுகின்றனர்.

சில நேரங்களில் பர்சுகளை திருடிக் கொண்டு ஓடுகின்றனர். ரோட்டில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கின்றனர். இவ்வளவுக்கும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மனநோய் மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இங்குள்ள டாக்டர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை. இவர்களின் வேலையே ரோட்டில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை பிடித்து, சிகிச்சை அளித்து குணப்படுத்தி அனுப்புவது தான்.

ஆனால் இந்த வேலையை இவர்கள் முறையாக செய்யாததால், பெண்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர் என பொதுமக்கள் புகார் எழுப்பி வருகின்றனர். தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் இந்த விஷயத்தில் நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Tags:    

Similar News