ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி உடல் சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது

சென்னையில் இறந்த ஓ.பி.எஸ்., மனைவியின் உடல் தற்போது பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.;

Update: 2021-09-01 14:00 GMT

பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஓ.பி.எஸ்., வீட்டில் அவரது மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த கட்சியினர்.

சென்னையில் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்த முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மனைவியின் உடல் பெரியகுளத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை சென்னையில் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.


முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, மற்றும் சசிகலா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் இன்று இரவு ஏழு மணிக்கு பெரியகுளத்தில் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News