தேனியில் துப்புரவு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு?

தேனி நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கூறி துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.

Update: 2021-10-27 04:17 GMT

தேனி நகராட்சியில் 180க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் நிரந்தர பணியாளர்கள். தவிர இதே எண்ணிக்கையில் தற்காலிக பணியாளர்களும் பணிபுரிந்து வந்ததாக நகராட்சி கணக்கில் இருந்தது.

புதியதாக நகராட்சியில் பொறுப்பேற்ற அதிகாரிகள் தற்காலிக துப்புரவு பணியாளர்களையும், அவர்களது பணிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, தற்காலிக பணியாளர்களில் பாதிப்பேர் பணியில் இல்லாமல், பணிக்கு வராமல் அவர்கள் பெயரில் சம்பளம் மட்டும் போடப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குளறுபடி தற்போது சரி செய்யப்பட்டதால், நகராட்சி நிர்வாகத்திற்கு மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தவறுக்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News