பெரிகுளம் அருகே கள்ளக்காதலிகளுடன் கணவன் உல்லாசம்; மனைவி வெறிச்செயல்
கள்ளக்காதலிகளை வீட்டிற்கு அழைத்து வந்து தன் கண்முன்னே அவர்களுடன் உறவு வைத்த கணவனை மனைவியே கழுத்தை நெறித்து கொலை செய்தார்;
கணவனை கொலை செய்த சந்தியாவை (சுடிதாரில் இருப்பவர்) பெரியகுளம் போலீசார் கைது செய்தனர்.
தனது கள்ளக்காதலிகளை வீட்டிற்கு அழைத்து வந்து மது அருந்தி விட்டு மனைவியின் கண்முன்னே அவர்களுடன் உறவு வைத்த கணவனை மனைவியே கழுத்தை நெறித்து கொலை செய்தார்.
பெரியகுளம் அருகே டி.கள்ளுப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்சிங், 35. ஆட்டோ டிரைவரான இவரது மனைவி சந்தியா, 30 . இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. ரஞ்சித்குமார் சிங் குடிப்பழக்கம் உடையவர். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளது. அதுவும் பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்து மனைவியின் கண்முன்னே அவர்களுடன் உறவு வைப்பார்.
சந்தியாவின் கோரிக்கை, வேண்டுதல், கெஞ்சல் எதுவும் ரஞ்சித்குமார் சிங்கிடம் எடுபடவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், இதே போல் ரஞ்சித்குமார் சிங் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். கோபத்தின் உச்சியில் இருந்த சந்தியா, ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய பயன்படும் கயிற்றால், தனது கணவனின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். அவர் துாக்குமாட்டி இறந்து விட்டதாக வெளியில் தெரிவித்தார்.
பெரியகுளம் போலீசார் ரஞ்சித்குமார் சிங் உடலை மருத்துவ பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார் நேரடியாக சந்தியாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது சந்தியா நடந்த விவரங்களை டி.எஸ்.பி.,யிடம் தெரிவித்து சரணடைந்தார். போலீசார் சந்தியாவை கைது செய்தனர்.