தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பகலிலும், இரவிலும் பரவலாக மழை பெய்தது

Update: 2021-11-02 04:00 GMT

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று இரவு கொட்டித்தீர்த்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் சாரல் பெய்தது. இரவில் பலத்த மழை பெய்தது. வீரபாண்டியில் 42.00 மி.மீ., உத்தமபாளையத்தில் 37.1 மி.மீ., போடியில் 21.4 மி.மீ., கூடலுாரில் 32.4 மி.மீ., பெரியகுளத்தில் 14.4 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 10 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் அனைத்து இடங்களில் கூடுதல் மழையளவு பதிவானது.

இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் விநாடிக்கு 2000ம் கனஅடியும், முல்லை பெரியாற்றில் விநாடிக்கு 2300 கனஅடியும், மஞ்சளாற்றில் 100 கனஅடியும் தண்ணீர் வெளியானது. வராகநதி, கொட்டகுடி ஆறு, சண்முகாநதி, சுருளி ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறுகளில் வெள்ளத்தின் அளவை கணக்கிடும் வசதி இல்லாததால் விவசாயிகள், பொதுமக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Tags:    

Similar News