சிறுத்தை தாக்கி நாய், மாடு உள்பட 3 விலங்குகள் பலியானதால் விவசாயிகள் அச்சம்

கண்காணிப்புகேமரா பொருத்தப்பட்டுள்ளதால் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விடப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது;

Update: 2021-10-29 03:45 GMT

பைல் படம்

கொடைக்கானல் வனஉயிரின கோட்ட எல்லைக்கு உட்பட்ட தேவதானப்பட்டி வனப்பகுதியில் சிறுத்தை உலாவுவதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை வனத்துறை இந்த தகவல் உண்மையில்லை என மறுத்து வந்தது. இந்நிலையில் ஒரு வாரத்தில் இரண்டு நாய், ஒரு பசு உட்பட மொத்தம் மூன்று விலங்குகள் சிறுத்தை கடித்து பலியானதாக மக்கள் புகார் எழுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வனப்பகுதிக்குள் நேற்று இரவு இரண்டு கண்காணிப்பு கேமராக்களை தேவதானப்பட்டி வனத்துறை பொருத்தி உள்ளது. இன்று மேலும் எட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சிறுத்தை உலவினால் பிடித்து சென்று அடர்ந்த வனத்திற்குள் விடப்படும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News