தேனியில் கொரோனா தடுப்பூசி போட்டால் ஜவுளிக்கடைகளில் 10 சதவீதம் சலுகை

மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலின்பேரில் ஜவுளிக்கடைகளில் கொரோனா தடுப்பூசி போடுபலர்களுக்கு 10 % சலுகை வழங்கப்படுகிறது

Update: 2021-10-30 08:15 GMT

தேனியில் இன்று முதல் தேனியில் உள்ள இரண்டு மிகப்பெரிய ஜவுளிக்கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டால், அவர்கள் எடுக்கும் ஜவுளியில் 10 சதவீதம்  தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இது குறித்து தேனி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்ட கலெக்டரின் ஒப்புதலின் அடிப்படையில், இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இரண்டு மிகப்பெரிய ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்த ஜவுளிக்கடைகளில் தினமும் செயல்படும் வகையில் ,கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டு ஜவுளி எடுப்பவர்களுக்கு எவ்வளவு ஜவுளி எடுத்தாலும் 10 சதவீதம் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படும். தவிர மாவட்டத்தில் இன்னும் ஒண்ணரை லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டி உள்ளது. இவர்கள் ஆல்கஹால் பயன்படுத்தும் நபர்கள் என்பதால் இவர்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டுகின்றனர். இதனால் நுாறு சதவீதம் இலக்கை எட்டுவதில் பிரச்னை நிலவுகிறது என்றனர்.

Tags:    

Similar News