பாதுகாப்பாக பக்ரீத் கொண்டாடுவது குறித்து ஜமாத்தார்களுடன் ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாதுகாப்பாக பக்ரீத் பண்டிகை கொண்டாடுவது குறித்து டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது

Update: 2021-07-20 11:00 GMT

பெரியகுளத்தில் பாதுகாப்பாக பக்ரீத் பண்டிகை கொண்டாடுவது குறித்து டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முஸ்லிம் மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இன்று டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் பெரியகுளம் காவல் நிலையத்தில் நாளை கொண்டாடவிருக்கும் பக்ரீத் பண்டிகையின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்து ஜமாத்தார்களுடன் கூடிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் அளவுக்கு அதிகமாக பொது இடங்களில் கூட்டம் சேர்தல் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. அந்தந்த பள்ளிகளிலே தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும், இளைஞர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸ் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என டி.எஸ்.பி., அறிவுறுத்தினர்.

இக்கூட்டத்தில் அனைத்து ஜமாத்தார்கள். இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், மீனாட்சி, எஸ்.ஐ., ராமபாண்டி மற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News