சாதனை படைத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா
தேனி மாவட்டத்தில் சாதனை படைத்த போலீஸ் அதிகாரிகளுக்கும், அவர்களது குழுவினருக்கும் திண்டுக்கல் டி.ஐ.ஜி., பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
தேனி எஸ்.பி., அலுவலகத்தில், கடந்த இரண்டு மாதங்களில் சாதனை படைத்த போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திண்டுக்கல் டி.ஐ.ஜி., விஜயகுமாரி தலைமை வகித்தார். தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே முன்னிலை வகித்தார்.
நண்பரை கொலை செய்து கிணற்றில் வீசிய கும்பலை கைது செய்த பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் குழு, வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்து டெல்லியில் பதுங்கியிருந்த கும்பலை கைது செய்த போடி இன்ஸ்பெக்டர் சரவணன், வக்கீல் கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்த உத்தமபாளையம் எஸ்.ஐ., திவான்மைதீன் தலைமையிலான குழுவினர், 80 கிலோவிற்குள் அதிகமான கஞ்சாவை பிடித்து, கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனையை கட்டுக்குள் கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி தலைமையிலான குழுவினரை, பாராட்டி டி.ஐ.ஜி., சான்றிதழ்கள் வழங்கினார்.