தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கோயில் வளாகத்தில் தூய்மைப்பணி
தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் பெரியகுளம் சுப்பிரமணியர் கோயில் வளாகத்தில் இன்று தூய்மைப்பணி நடைபெற்றது;
பெரியகுளம் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் சுப்பிரமணியர் கோயிலை சுத்தம் செய்தனர்.
வராகநதி படித்துறையில் பாலீதீன் கழிவுகளை முழுமையாக அகற்றினர். இன்று காலை முதல், பிற்பகல் வரை இப்பணியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டனர். கோயில் வளாகம், படித்துறை, வராகநதி முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டது.