தேவதானப்பட்டி அருகே வேன் - சரக்கு வாகனம் மோதல்: 17 பேர் படுகாயம்
தேவதானப்பட்டி அருகே சுற்றுலா வேனும் சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.;
தேவதானப்பட்டி அருகே சுற்றுலா வேனும், சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
வத்தலக்குண்டில் இருந்து வைகை அணைக்கு வந்த சுற்றுலா வேனும், பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு வேனும் தேவதானப்பட்டி சாத்தாகோவில்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் வேனில் வந்த ஆறு பெண்கள், இரண்டு சிறுவர்கள், 9 ஆண்கள் உட்பட மொத்தம் 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜன் தலைமையில் வனத்துறையினரும், போலீசாரும் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.