கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் குழந்தைகளை பராமரிக்க தேனியில் ஏற்பாடு!

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோர்கள் இறந்து விட்டலோ, சிகிச்சை பெற்று வந்தாலோ அவர்களது குழந்தைகள் பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2021-05-18 15:07 GMT

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இறந்து விட்டலோ அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலோ அவர்களது குழந்தைகள் பராமரிக்க இயலாத சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. அத்தகைய குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இறந்த நிலையில் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெற்றோரால் பராமரிக்க இயலாத நிலையில் உள்ள 18 வயது நிறைவடையாத குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், அக்குழந்தைகளுக்கு தேவையான தங்குமிடம், உணவு, மனவள ஆலோசனை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி அவர்களை பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே இக்குழந்தைகள் பற்றிய தகவல் தெரிந்தால் உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம், மாவட்ட ஆட்சியார் அலுவலக வளாகம், தேனி மற்றும் 04546 - 291919,98435 53264, 89031 84098 என்ற எண்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் கோவிட்-19 பெருந்தொற்று காலங்களில் குழந்தை திருமணம் நடைபெற்றால் குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-ன் படி, 2 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் 1 இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் புகார் குறித்த தகவல்களை இலவச தொலைபேசி எண்.1098 மற்றும் 99657 57617 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News