ஆர்.என்.ரவி உட்பட 5 மாநில கவர்னர்கள் மாற்றம்?

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உட்பட ஐந்து மாநில கவர்னர்கள் மாற்றப்பட உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.;

Update: 2024-10-21 03:00 GMT

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி -கோப்பு படம் 

மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கவர்னர் பதவியில் நீடிப்பவர்களை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஐந்து மாநில கவனர்கள் மாற்றப்பட உள்ளனர். இவர்களில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் ஒருவர். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் தமிழக கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென்னிந்தியா மூன்று புறமும் கடல் சூழ்ந்த தீபகற்பம். தவிர லட்சத்தீவுகள், மாலத்தீவுகள், இலங்கை என பல தீவுக்கூட்டங்களை கொண்டது. உலக வணிகத்தின் முக்கியமான கடல் வழித்தடம் கொண்டது. இதனை சமூக விரோதிகளும் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். எதிரி நாடுகளும் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

தமிழகத்திற்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தமிழ கவர்னர் என்பவர் மாநில அரசை வழிநடத்துபவர் மட்டுமல்ல. தேசப்பாதுகாப்பு குறித்த நிகழ்வுகளிலும் முக்கிய பங்காற்றக்கூடியவர். இலங்கையில் சீனா காலுான்ற முயற்சிக்கும் நிலையில் அதற்கு தகுந்த பதிலடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு எடுத்து வருகிறது. தவிர தமிழக கடலோர பாதுகாப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

மத்திய அரசின் இந்த நிகழ்வுகளில் கவர்னர் ஆர்.என்.ரவி முக்கிய பங்காற்றினார். ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர் தேசிய பாதுகாப்பு பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியை நியமித்தன் மூலம் தேசப்பாதுகாப்பிற்கான பல விஷயங்களில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

இந்நிலையில் இவருக்கு பதிலாக முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கை நியமிப்பதன் மூலம் மத்திய அரசு தென்னிந்தியாவின் பாதுகாப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். வி.கே.சிங்., பிரதமர் மோடி அமைச்சரவையிலும் இணை அமைச்சராக பணியாற்றிவர். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நபர்களை தான் பிரதமர் மோடி தமிழக கவர்னராக நியமிக்கிறார் என பா.ஜ.க.,வினர் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழக பா.ஜ.க., தலைவர்கள் பலர் கவர்னர் பதவி தங்களுக்கு வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டு வருகின்றனர். இந்த பட்டியலில் பா.ஜ.க.,வின் முக்கிய தலைவரான ஹெச்..ராஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெச் .ராஜா ராசியில்லாதவர் என்ற ஒரு முத்திரையுடன்  வலம் வருகிறார். அவருக்கு யோகம் இருக்குமா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான விடைகள் கிடைத்து விடும்.

தவிர கவர்னர் ஆர்.என்.ரவி தி.மு.க., அரசுடன் ஏற்படுத்திய மோதலால் மாற்றப்படவில்லை. ஐந்து ஆண்டுக்கு மேல் கவர்னர் பதவியில் நீடிப்பதால் தான் மாற்றப்பட உள்ளார். தவிர கவர்னர் மாற்றுவதில், தேசிய பாதுகாப்பையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என பா.ஜ.க.,வினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News