'ஓட்டு போட மறக்காதீங்க' : தேனி கலெக்டர் விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.

Update: 2021-03-22 05:29 GMT

   தேர்தலையொட்டி, தேனி மாவட்டத்தில் நூறு சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தி தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தையில் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணன் உண்ணி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.

பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தையில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணன் உண்ணிபொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) தாக்ரே சுபம், துணை இயக்குநர் (வேளாண் விற்பனைக்குழு) பால்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஷ்ணுராம் மேத்யூ, வட்டாட்சியர்(தேனி) தேவதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News