மாடு மேய்க்கத்தடை: வனத்துறை முடிவை கண்டித்து விவசாயிகள் முற்றுகை

மேகமலையில் மாடுகளை மேய்க்க தடை விதித்த வனத்துறையின் உத்தரவை விலக்கக்கோரி, சின்னமனுார் வனச்சரகர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.;

Update: 2021-09-29 13:00 GMT
மாடு மேய்க்கத்தடை: வனத்துறை முடிவை கண்டித்து  விவசாயிகள் முற்றுகை

சின்னமனுார் வனச்சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

  • whatsapp icon

தேனி மாவட்டம், மேகமலை வனவிலங்குகள் சரணாலயம், கடந்த ஆண்டு புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர், வனவளத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வன ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வனத்திற்குள் மூன்று தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று வாய்ப்புகள் வழங்கப்பட்டு வெளியேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  வனத்திற்குள் மாடுகளை மேய்க்கக்கூடாது என,  வனத்துறை தடை விதித்தது. இதனால் மாடு வளர்ப்போர் பெரும்  கவலைக்குள்ளாகி உள்ளனர். வனத்துறை தடையை கண்டித்து, இன்று சின்னமனுார் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஐந்து மணி நேரத்தை கடந்தும்,  முற்றுகை போராட்டம் நீடித்தது. வனத்துறை அதிகாரிகள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News