தேனியில் சிப்காட் அமைக்கப்படும்-துணை முதல்வர்

Update: 2021-02-17 11:45 GMT

தேனியில் சிப்காட் அமைக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனியில் அரசின் பல்துறை சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 400 நபர்களுக்கு ரூ7 லட்சம் மதிப்பில் நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 1,728 பயனாளிகளுக்கு ரூ 6.80 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

விழாவில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அரசு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர் வரும் 28ம் தேதி தேனி மாவட்டத்தில் சிப்காட் அமைக்கப்படும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் எம்.பி ரவீந்திரநாத், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News