தேனியில் 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தேனி - அல்லிநகரம் நகராட்சியில் 11வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் தெருவில் வசித்து வருபவர் கர்ணன் (58). கூலி வேலை செய்து வரும் இவர், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமியிடம் கடந்த பிப்ரவரி 3 ம் தேதி பாலியல் ரீதியாக பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு, காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அல்லிநகரம் காவல்துறையினர் கர்ணனை தேடி வருகின்றனர்.