தேனியில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

Update: 2021-01-30 11:48 GMT

14வது ஊதிய ஒப்பந்தத்தை துவக்கக் கோரி தேனி பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் 14அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனை எதிரில் எல்.பி.எப் கிளை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் சிஐடியு மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார்.

இதில் 25 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும், தொழிலாளர் பணம் ரூ 7000 கோடியை திருப்பி வழங்கிட வேண்டும், பென்சனை அரசே ஏற்று நடத்தி புதிய பென்சனை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை உடனடியாக சுமூகமான முறையில் பேசி முடிக்க வலியுறுத்தி பேசினர். இந்த உண்ணாவிரதத்தில் எல்பிஎஃப், சிஐடியூ, ஏஏஎல்எல்எஃப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News