பள்ளிக்கூட மாணவர்களுக்கு இது இப்போ கட்டாயம்ங்க..!
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்க 2 வாரங்களே உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை இப்பொழுதே வாங்கி வைப்பது நல்லது
பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை பெறுவது குறித்த முக்கியமான தகவல் நிச்சயமாக உதவும்
பள்ளி திறக்க இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு இ- சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள் ஆனால் அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனர். அதனால் பல தடவை அலைந்து வருகிறார்கள். என்னென்ன தேவை என்பதை பெற்றோர்கள் அறிந்து கொண்டால் அலைச்சல், காலதாமதத்தை தவிர்க்கலாம்.
முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
புகைப்படம்.
குடும்ப அட்டை.
ஆதார் அட்டை.
மாற்றுச்சான்றிதழ்(TC).
மதிப்பெண் பட்டியல்(10,12).
ஜாதி,வருமானம் சான்றிதழ்.
முதல் பட்டதாரி பத்திரம்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்வி சான்றிதழ்.
அலைபேசி(otp வரும் அதனால்) அனைத்தும் அசல் மற்றும் நகல்.
ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
குடும்ப அட்டை.
ஆதார் அட்டை.
மாற்றுச்சான்றிதழ் (TC)அல்லது தந்தையின் மாற்றிச்சான்றிதழ் (அ) தந்தையின் ஜாதி சான்றிதழ்.
புகைப்படம். அலைபேசி otp வரும் அதனால் அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்.
வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
குடும்ப அட்டை.
ஆதார் அட்டை.
வருமான சான்று(payslip) + பான்கார்டு.
அலைபேசி otp வரும் அதனால் புகைப்படம் அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவை.
இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
குடும்ப அட்டை
ஆதார் அட்டை
அலைபேசி otp வரும் அதனால் புகைப்படம் ,அனைத்தும் நகல் மற்றும் அசல்.
அந்தந்த ஊர்களிலும் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கம் (society)லும் இந்த சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் நீங்கள் உங்களுடைய அலைச்சலை குறைக்கலாம்.