உங்க ஊரின் உண்மையான பெயர்... தெரியுமா உங்களுக்கு..?

இது தெரியாமத்தான் இத்தனை நாளா இருந்திருக்கோம்...

Update: 2024-10-24 03:18 GMT

தமிழ் நாடு படம் 

தமிழில் உள்ள ஊர் பெயர்கள்.. மற்றும் உண்மையான பெயர்களை பற்றி பார்க்கலாம்....

காஞ்சிபுரம் அல்ல, கஞ்சிவரம்.

மதுரை அல்ல, மருதத்துறை.

மானாமதுரை அல்ல, வானவன் மருதத்துறை.

காளையார் கோவில் அல்ல, கானப்பேரெயில்.

சிவகங்கை அல்ல, செவ்வேங்கை.

திருவாரூர் அல்ல, ஆரூர்.

பொள்ளாச்சி அல்ல, பொழில் ஆட்சி.

திண்டிவனம் அல்ல, அது தில்லைவனம்,


கான்சாபுரம் அல்ல, கான்சாகிபு புரம்.

(மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்)

வத்ராயிருப்பு அல்ல, வற்றாத ஆறு இருப்பு.

தனுஷ்கோடி அல்ல, வில்முனை.

இராமேஸ்வரம் அல்ல, சேதுக்கரை.

இராமநாதபுரம் அல்ல, முகவை.

செங்கல்பட்டு அல்ல. செங்கழுநீர்பட்டு.

சேர்மாதேவி அல்ல, சேரன்மகாதேவி.

விருத்தாசலம் அல்ல, முதுகுன்றம்.

வேளாங்கண்ணி அல்ல, வேலற்கன்னி.

சைதாப்பேட்டை அல்ல, சையது பேட்டை.

தேனாம்பேட்டை அல்ல, தெய்வநாயகம் பேட்டை.

கொசப்பேட்டை அல்ல, குயவர்பேட்டை.

குரோம் என்ற லெதர் கம்பெனியை காயிதே மில்லத் உருவாக்கியதால் குரோம்பேட்டை ஆனால் அது தோல் பேட்டை தான்.

புரசைவாக்கம் அல்ல, புரசைப்பாக்கம்.

பெரம்பூர் அல்ல, பிரம்பூர்.

சேத்துப்பட்டு அல்ல, சேற்றுப்பேடு.

அரும்பாக்கம் அல்ல, அருகன்பாக்கம்.

சிந்தாதரிப்பேட்டை அல்ல, சின்னத்தறிப்பேட்டை.

உடுமலைபேட்டை அல்ல, ஊடுமலைப்பேட்டை.

பல்லாவரம் அல்ல, பல்லவபுரம்.

தாராசுரம் அல்ல, ராராசுரம்.

ஈரோடு அல்ல, ஈரோடை.

ஒகேனக்கல் அல்ல, புகைக்கல்.

தர்மபுரி அல்ல, தகடூர்.

பழனி அல்ல, பொதினி.

கும்பகோணம் அல்ல, குடந்தை.

தரங்கம்பாடி அல்ல, அலைகள்பாடி.

காவிரிபூம்பட்டினம் அல்ல, காவிரிபுகும்பட்டினம்.

பூம்புகார் அல்ல, புகும்புகார்.

ஸ்ரீரங்கம் அல்ல, அரங்கம்.

திருவையாறு அல்ல, ஐயாறு.

சீர்காழி அல்ல, சீகாழி.

வேதாரண்யம் அல்ல, திருமறைக்காடு.

கல்பாக்கம் அல்ல, கயல்பாக்கம்.

சேலம் அல்ல சேரளம்.

எடப்பாடி அல்ல இடையர்பாடி.

திருத்தணி அல்ல திருத்தணிகை.

திருவண்ணாமலை அல்ல அண்ணாந்துமலை.

கடலூர் அல்ல கூடலூர்.

சின்னமனுார் அல்ல ஹரிகேசநல்லுார்.

இப்படி இது போல் தமிழகத்தின் பல உண்மையான பெயர்கள் மாறி அழைக்கப்படுகிறது.

Tags:    

Similar News