தன்னம்பிக்கையோடு நடைபோடும் ஆட்டுக்குட்டி

கால்களை இழந்த ஆட்டுக்குட்டிக்கு, ப்ரத்யோக வண்டி மூலம் மறுவாழ்வு அளித்த இளைஞர்..!;

Update: 2021-06-18 06:15 GMT

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆண்கள் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சைமன். பி.சி.ஏ படித்துள்ள இவர் வீட்டில் செல்லப் பிராணிகளாக நாய், ஆடு, மாடு, முயல் போன்றவற்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், அவர் வளர்த்து வந்த ஆட்டுகுட்டியின் மேல் டூவீலர் மோதியதில் ஆட்டுக் குட்டியின் பின்னங்  கால்களின் நரம்புகள் துண்டாகிவிட்டன. இதனையடுத்து, ஆட்டுக்குட்டியைத் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆட்டை பரிசோதித்த டாக்டர்கள், ``இனி ஆட்டுக் குட்டியால் எழுந்திருக்கவே முடியாது. நடக்கவும் முடியாது என்று கூறிவிட்டனர். இதில் சைமன் கவலை அடைந்தார். 

உயிராக நேசித்து வளர்த்த ஆட்டுக்குட்டியின் நிலையை எண்ணி வருந்திய சைமன், எப்படியாது ஆட்டுக்குட்டியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நடந்து செல்ல வைக்க வேண்டும் என்று யோசித்தார். ஆட்டுக்குட்டி தானே புல் மேய வேண்டும் என்று முடிவு செய்தார். 

   ஆட்டுக்குட்டிக்காகவே பி.வி.சி பைப் மூலம் வண்டி ஒன்றைத் தயார் செய்தார். அதில் பின்புறம் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆட்டுக்குட்டி முன்னனங் காலை தூக்கி வைத்தால் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள சக்கரம் உருண்டு ஆட்டுக்குட்டி நடப்பதற்கு வழிசெய்கிறது. 

வீட்டின் அருகே உள்ள பகுதிகளில் இப்போது ஆட்டுக்குட்டியால்  நகர்ந்து சென்று புல் மேய முடிகிறது.  பெரும் சிரத்தை எடுத்து கால்கள் உடைந்த ஆட்டுக்குட்டியை குழந்தையைப் போல் எண்ணி பராமரித்து வரும் இளைஞர் சைமனை பலரும் பாராட்டி வருகின்றனர். 

Tags:    

Similar News