புதுக்கோட்டையில் சிறுமியர் இல்லத்தை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

இல்லங்களில் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், அவை சுகாதாரமான முறையில் சமைக்கப்படுதையும் ஆய்வு செய்தார்;

Update: 2023-06-13 09:15 GMT

புதுக்கோட்டை நகராட்சி, மார்த்தாண்டபுரத்தில் செயல்பட்டுவரும் ஆரோக்கியா சிறுமியர் இல்லத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை  மார்த்தாண்டபுரத்தில் செயல்பட்டுவரும் ஆரோக்கியா சிறுமியர் இல்லத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை நகராட்சி, மார்த்தாண்டபுரத்தில் செயல்பட்டுவரும் ஆரோக்கியா சிறுமியர் இல்லத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், சிறுமியர் இல்லத்தில் தங்கி பயின்று வரும் மாணவியர்களின் எண்ணிக்கைகள் குறித்தும், அவர்கள் பயின்றுவரும் கல்வி நிலைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்  கேட்டறிந்தார்கள். மேலும் நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவியர்கள் குறித்தும், அவர்களின் படிப்பிற்காக இல்லத்தில் வழங்கப்படும் வசதிகள் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

மேலும் இல்லங்களில் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், அவை சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு அட்டவணைகளையும் பார்வையிட்டு, அதன்படி தரமான முறையில் உணவு சமைக்கப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மாணவியர்கள் தங்கும் அறை, உணவுக் கூடம், சமையலறை, கழிவறை உள்ளிட்டவைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து, சிறுமியர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளையும் மாவட்ட ஆட்சியர்  ஆய்வு செய்தார்.

கல்வி ஒன்றே உங்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதால், மாணவியர்கள் அனைவரும் தங்களது கல்வியில் முழு ஈடுபாட்டுடன் படித்து சமுதாயத்திற்கு நற்பெயரை ஈட்டித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா மாணவியர்களிடம் தெரிவித்தார். இந்த ஆய்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News