உயர்நீதிமன்ற தீர்ப்பால் அ.தி.மு.க.வில் இனி நடக்க போகும் மாற்றங்கள்
High Court Judgement - உயர்நீதி மன்ற தீர்ப்பினால் வரும் நாட்களில் அ.தி.மு.க.வில் முக்கியமான மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
High Court Judgement - அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு காரணமாக கட்சியில் வரும் நாட்களில் 6 முக்கியமான மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது ஜூலை 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும். அந்த பொதுக்குழுவில் எந்த பதவியும் உருவாக்கப்படவில்லை, நீக்கப்படவில்லை. அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாயிண்ட் 1 - பொதுக்குழு செல்லாது - இந்த தீர்ப்பு காரணமாக எடப்பாடி பழனிசாமி முன்பு கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் செல்லாது.
பாயிண்ட் 2 - பொதுக்குழு கூட்ட முடியாது - இனி எடப்பாடி தனியாக பொதுக்குழுவை கூட்டவே முடியாது. ஓ பன்னீர்செல்வமும் பொதுக்குழுவை கூட்ட கையெழுத்து போட வேண்டும்.
பாயிண்ட் 3 - எந்த நியமனமும் செல்லாது - எடப்பாடி இடைப்பட்ட காலத்தில் செய்த நியமனங்கள் எதுவும் செல்லாது.
இந்த வழக்கில் வந்துள்ள தீர்ப்பு காரணமாக பின்வரும் 6 சம்பவங்கள் அ.தி.மு.க.வில் நடக்கும்.
மேல்முறையீடு 1 - எடப்பாடி பழனிசாமி இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அது இரட்டை அமர்வு நீதிபதிக்கு மட்டுமே செல்லும்.
மேல்முறையீடு 2 - அதில் என்ன தீர்ப்பு வந்தாலும் இருவரில் ஒருவர் உச்ச நீதிமன்றம் செல்வார்.
இதனால் வழக்கு பல நாட்கள் நடக்கும். இப்படிப்பட்ட காலத்தில் தேர்தல்கள் வரும் பட்சத்தில் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருவரும் இணைந்துதான் எதிலும் கையெழுத்து போட வேண்டும். இவர்கள் இருவரும் கையெழுத்து போட்டால்தான் சின்னம் கூட வேட்பாளர்களுக்கு கிடைக்கும். இதனால் வரும் நாட்களில் தேவையான சமயங்களில் மட்டும் இருவரும் சேர்ந்து கையெழுத்து போட வேண்டிய நிலை ஏற்படலாம். ஏனென்றால் வழக்கு கண்டிப்பாக பல நாட்கள் நடக்கும்.
இந்த தீர்ப்பு காரணமாக பொதுக்குழு செல்லுபடி ஆகாது என்று முடிவாகி உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வில் செய்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியது இல்லை. அதாவது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று விதி மாற்றம் செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டியது இல்லை. பொருளாளர் பதவி மாற்றத்திற்கும் இதுவே பொருந்தும்.
இதேதான் சட்டசபைக்கு பொருந்தும். இதனால் ஓ. பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நீடிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் எடப்பாடியின் இந்த முடிவு செல்லாது. ஆர்.பி. உதயகுமார் எதிர்க்கட்சி துணை தலைவராக எடப்பாடி மூலம் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு செல்ல்லாது. இதில் சபாநாயகர் அப்பாவு இன்னும் முடிவு எடுக்கவில்லை. பெரும்பாலும் தீர்ப்பு அடிப்படையிலேயே அவர் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீர்ப்பு காரணமாக அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பதை எடப்பாடி நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் இனி தனியாக முடிவு எடுக்க முடியாது. இதன் காரணமாக அ.தி.மு.க.வில் அணிகள் மாற வாய்ப்புகள் உள்ளன. அதாவது அவரின் பக்கத்தில் உள்ள சிலர் தீர்ப்பால் அணி மாறும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் சிலர் எடப்பாடி பக்கத்தில் இருந்து ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்ல வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2