கருணாநிதி நினைவுநாள் கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கல்

புளியங்குடி அருகே கருணாநிதி நினைவு நாளையொட்டி அப்துல்கலாம் இயக்க இளைஞர்களால் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது;

Update: 2021-08-28 04:02 GMT

புளியங்குடி அருகே கலைஞர் நினைவு தினத்தையொட்டி,வடநத்தம்பட்டியில், அப்துல்கலாம் இயக்கத்தின் இளைஞர்களால் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில்,வெற்றி பெற்ற அணிகளைப் பாராட்டி பரிசுகளும், வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர். மா. செல்லத்துரை  தலைமை வகித்து , வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகளை பரிசளித்து பாராட்டினார்.தென்காசி மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வழக்கறிஞர் 'சங்கை' கணேசன்* முன்னிலை வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.வடனத்தம்பட்டி கிராம திமுக செயலாளர் பூ.குமார், காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் ஆகியோர் வரவேற்று சால்வை அணிவித்தனர். நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபாண்டியன், புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ், சங்கரன்கோவில் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யாத்துரைப் பாண்டியன் மற்றும் திமுக, காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News