தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் பல்வேறு போட்டிகள்: மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு

மகாத்மாகாந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாள் விழா தென்காசி வ.உ.சி வட்டாரநூலகத்தில் நடைபெற்றது.;

Update: 2021-10-03 13:40 GMT

பள்ளிக்கல்விதுறை, தென்காசி வ.உ.சி வட்டாரநூலகம் மற்றும் ரோட்டரிகிளப்ஆப் குற்றாலம் சாரல் இணைந்து மாவட்ட அளவில் நடத்திய மகாத்மாகாந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாள் விழா தென்காசி வ.உ.சி வட்டாரநூலகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு தென்காசி மாவட்ட தோட்டக்கலைதுறை துணை இயக்குநர் சு.ஜெயபாரதிமாலதி தலைமை வகித்தார். வட்டாரநூலகர் பிரமநாயகம் வரவேற்றார்.


மாவட்டஅளவில் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் 440 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கு ரோட்டரிகிளப்ஆப் குற்றாலம் சாரல் தலைவர் ராமகிருஷ்ணன் , செயலாளர் குமார் , முன்னாள் தலைவர் சுப்பாராஜ் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் வாசகர்வட்ட துணைத்தலைவர் அருணாசலம், வட்டாரகல்வி அலுவலர்கள் மாரியப்பன், இளமுருகன், அரசுஅலுவலர் ஒன்றிய மாவட்டதலைவர் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினர். நூலகர் சுந்தர் நன்றி தெரிவித்தார்.


விழாவினை நூலகர்கள் ஜீலியாராஜ செல்வி, நிஹ்மத்துன்னிஸா, ராஜேல்வரி, வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தைஜேசு, முருகேசன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மகாத்மாகாந்தி மற்றும் காமராஜர் பற்றிய கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 26 மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மகாத்மாகாந்தி மற்றும் காமராஜர் பற்றிய கவிதைப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 6 ஆசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விழாவில் ரோட்டரி கிளப் ஆஃப் குற்றரலம் சாரல் தலைவர் P.ராமகிருஷ்ணன் 263வது புரவலராகவும் , ரோட்டரி கிளப் ஆஃப் குற்றரலம் சாரல் செயலாளர் A.S.குமார் 264வது புரவலராகவும் இணைந்தார்கள்.

மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம் மற்றும் நூலக ஆய்வாளர் , கண்காணிப்பாளர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News