தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா

தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா மிக சிறப்பாக நடந்தது.;

Update: 2022-03-18 14:07 GMT

தோரணமலை முருகன் கோவிலில் தீபாராதனை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இன்று பங்குனி உத்திர வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் குடும்பத்திற்கு ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி மக்கள் இன்று காலை முதலே சாஸ்தா, முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

அதே போல் தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், அகத்தியரும், தேரையர் சித்தரும் வழிபட்டதுமான தோரணமலை முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மலை மேல் அமைந்துள்ள ஆலயத்தில் உள்ள முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மலையின் கீழ் கலையரங்கத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு தீபாராதனையை தருமபுர ஆதீன மடத்தின் மாணவர் ஓதுவார் சங்கர சட்டநாதன் செய்து வைத்தார்.

சிவ பூத கண நாதர் பஞ்சவாத்தியம் குழுவினரின் இன்னிசை ஒலிக்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பாரதம் பொருளாதாரத்தில் மேம்படவும், மக்கள் ஆரோக்கியமான வாழ்வு கிடைத்திட வேண்டியும் பொதுமக்களே பூக்களை கொண்டு அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வழாவில் முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி ராஜேந்திரன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமலிங்கம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்

Tags:    

Similar News