தென்காசி: 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முழு விபரங்கள்

பதற்றம் நிறைந்த 134 வாக்குச்சாவடிகளுக்கு, கண்காணிப்பு கேமரா (CCTV) பொருத்தப்பட்டு, அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

Update: 2022-01-28 03:09 GMT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புறங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது. 2016-ல் நடத்தப்பட வேண்டிய இந்தத் தேர்தல்கள் சுமார் ஆறு ஆண்டுகள் தாமதத்துக்குப் பின் இப்போது நடைபெறவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சிகளில் உண்மையான மக்களாட்சி மீண்டும் தொடர உள்ளது. இந்நிலையில் புதிய மாவட்டம் தென்காசியின் உள்ளாட்சி தேர்தல் விபரங்களை பார்ப்போம் 

தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.

2.அட்டவணை விபரம் 



3. நேரடித் தேர்தல் நடைபெறவுள்ள பதவியிடங்கள்:

நேரடி தேர்தல் நடைபெறவுள்ள பதவியிடங்கள் நகராட்சி அமைப்புகளுக்கு 180 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், பேரூராட்சி அமைப்புகளுக்கு 260 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், மொத்தம் 440 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

4. வாக்குச்சாவடிகளின் விவரம்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சிப் பகுதிகளில் வாக்குப்பதிவு செய்ய அமைக்கப்பட்ட 338 வாக்குச்சாவடிகளில் 134 ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 134 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும் 70 அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகளும் உள்ளது. பேரூராட்சிப் பகுதிகளில் வாக்குப்பதிவு செய்ய அமைக்கப்பட்ட 294 வாக்குச்சாவடிகளில் 34 ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 34 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும் 226 அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகளும் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 632 வாக்குச்சாவடிகள் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

5. வாக்காளர்களின் விபரம்:

இத்தேர்தலில் நகராட்சிப் பகுதிகளில் 150760ஆண் வாக்காளர்களும், 156448 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 307216 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பேரூராட்சிப் பகுதிகளில் 105950 ஆண் வாக்காளர்களும் , 110224 பெண் வாக்காளர்களும், 30 மூன்றாம் பாலினவாக்காளர்களும் ஆக மொத்தம் 216204 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் தென்காசி மாவட்டத்தில் 256710 ஆண் வாக்காளர்களும், 266672 பெண் வாக்காளர்களும், 38 மூன்றாம் பாலினவாக்காளர்களும் ஆக மொத்தம் 523420 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

6. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் விவரம்:

நகராட்சிப் பகுதிகளில் 6 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 21 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும், பேரூராட்சிப் பகுதிகளில் 17 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 33 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 632 வாக்குச்சாவடிகளில் 3056 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

7. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்காக 764 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இணைய வழியாக முதற்கட்ட தேர்ந்தெடுத்தல் (First Randomization) மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 06.01.2022 அன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.

8. தேர்தல் பார்வையாளர்கள் :

இணை இயக்குநர்/உதவி இயக்குநர் /துணை ஆட்சியர் நிலையில், பேரூராட்சி/நகராட்சி ஒன்றிற்கு ஓர் அலுவலர் வீதம் 23 வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

9. வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கலின் போது இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். கோவிட் -19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி வேட்புமனுதாக்கல் செய்ய வேட்பாளர் (அ) ஒரு முன் மொழிபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் வேட்பாளர் உதவி மையம் (Help Desk) அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

10. வேட்பு மனு மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு

சின்னங்கள் ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்குரிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனினும், வேட்பு மனு தாக்கல் செய்து படிவம் B முழுமையாக பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர்/செயலர்/நிர்வாகி அத்தாட்சி பெற்ற நபர் ஆகியோர் ஒப்பத்துடனும், கட்சி முத்திரையுடனும் வழங்க வேண்டும். மேலும், படிவம் C சம்மந்தப்பட்ட வேட்பாளர் படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வழங்கவேண்டும். இது தவிர ஏனைய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அனைவருக்கும் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்பட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட நெறிமுறையின்படி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

11. போட்டியிடும் வேட்பாளர்களின் வைப்புத்தொகை விவரம்:




 12. தேர்தல் செலவினங்கள்:

வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவினவரம்பானது பின்வருமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவினக் கணக்குகளை ஒப்படைத்திட வேண்டும். ஒப்படைக்கத் தவறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இயலாதவாறு மூன்று ஆண்டுகளுக்கு தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.

13. பாதுகாப்பு ஏற்பாடுகள்:

தென்காசி மாவட்டத்தில் மக்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாகவும், வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்திடவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

134 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு, வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமரா (CCTV) நுண்பார்வையாளர்கள் (Micro Observer)/இணையதள கண்காணிப்பு (web Streaming) ஆகியவற்றின மூலம் கண்காணிக்கப்படவுள்ளன.

14. மறைமுக தேர்தல்கள் :

தென்காசி மாவட்டத்திலுள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு சாதாரண நேரடித் தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு பின்வரும் பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல்கள் 04.03.2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும்.

மறைமுகத் தேர்தலுக்கான பதவியிடங்கள் பதவியிடங்களின் எண்ணிக்கை

நகராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் நகராட்சி மன்ற துணைத்தலைவர்

பதவியிடங்கள் பேரூராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர்

பதவியிடங்கள்


15. வாக்காளர்கள் அடையாளம் காணுவதற்கான ஆவணங்கள் :

வாக்காளர் அடையாள அட்டை பெற்றவர்கள் வாக்களிக்கும்போது ஆளறி சான்றாக பயன்படுத்தலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் பின்வரும் ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பிக்க வேண்டும்.

I. ஆதார் அட்டை (Aadhaar card) ii. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிக்குரிய அட்டை

(MGNREGS Job Card) iii. புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சல் சேமிப்புபுத்தகம் (Passbook with

Photograph issued by Bank/Postoffice).

iv. Health Insurance Smart Cards issued under the scheme of

Ministry of Labour v. | வாகன ஓட்டுநர் உரிமம் (Driving License) vi. பான் கார்டு (Pan card) vii. (Smart Card issued by RG/Under MPR) viil. இந்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட் (Indian Passport)

ix. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் (Pension documents

with photograph) மத்திய/மாநில அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலக பணியார்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள GIL.60L (Service ID entry cards with Photograph issued to the employees by Central/State Governments Public Sector undertaking, public limited companies. பாராளுமன்ற உறுப்பனர் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை (Official identify cards issued to MPs/MLAs/MLCs.)

16. மண்டலகுழுக்கள் :

வாக்குப்பதிவு ஏற்பாடுகளை கண்காணிக்க 6 நகராட்சிகளில் 26 மண்டல குழுக்களும், 17 பேரூராட்சிகளில் 22 மண்டல குழுக்களும் மொத்தம் 48 மண்டல குழுக்கள் (Zonal Team) தென்காசி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளன.

17. வாக்கு எண்ணும் மையங்கள் :

தென்காசி மாவட்டத்தில் 6 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை (Strong room) உட்புறம் மற்றும் வெளிப்புறம் மற்றும் வாக்கு எண்ணும் கூடங்களில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.

18. தேர்தல் நடத்தை விதிகள்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. வேட்பாளர்கள் அதிகபட்சம் 3 நபர்களுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து பிரச்சாரம் செய்யலாம். . ஊர்வலங்கள், சைக்கிள்/பைக் பிறவாகனங்களின் ஊர்வலங்கள், பேரணிகள் ஆகியவைகள் 31.01.2022 வரை அனுமதியில்லை . உள்ளரங்க கூட்டங்களுக்கு அதிகபட்சமாக 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உள்ளரங்க கூட்டங்களில் பங்கேற்பவர்கள் சமூக இடைவெளயை கடை பிடித்து முகக்கவசம் அணிய வேண்டும்.

கொரோனா தொற்றை குறைக்க வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் டிஜிட்டல்/இணையவழி ஊடகதளங்கள்/கைபேசி அடிப்படையிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவதை கண்காணிக்க 60 பறக்கும் படை குழுக்கள் மூன்று சுழற்சியில் 24 மணிநேரமும் செயல்படும் வகைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட உள்ளது. பொது மக்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 18004258374 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை விதிகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்கு அருகில் உள்ள பகுதிகளில் 5 கி.மீ சுற்றளவு வரை பொருந்தும். கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது பிறவழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சார இடங்களாக பயன்படுத்தக்கூடாது. எந்த கட்சியோ அல்லது வேட்பாளரோ காவல் துறையிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. பிரச்சாரத்திற்காக காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை மட்டுமே பயன்படுத்தலாம். இந்த விதிகளை மீறுவோர்களிடமிருந்து சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாக்குகளைப் பெறுவதற்கென சாதி அல்லது சமூக உணர்வுகளைத் தூண்டும் வகையில் எந்தவொரு வேண்டுகோளையும் விடுக்கக்கூடாது. உள்ளாட்சி தேர்தல் காலத்தில் சுற்றுப்புற சூழ்நிலை பாதுகாப்பின் நிமித்தம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் மற்றும் இதுபோன்ற மக்காத பொருட்களை பயன்படுத்தி போஸ்டர், பேனர் மற்றும் விளம்பர பொருட்கள் தயார் செய்தல் கூடாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நேரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலரது அலுவலகத்திற்கு 200 மீட்டர் தொலைவிற்குள் அதிகப்படியாக மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் ஒரே ஒரு வாகனம் மட்டுமே தங்களது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்த வேண்டும். வேட்பாளரின் முகவர்களுக்கு தனிவாகனம் பயன்படுத்த வழிவகை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கோவிட் -19 பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் நடைபெற எல்லா விதத்திலும் ஒத்துழைக்க வேண்டுமெனக் மாவட்ட நிர்வாகம், தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

Similar News