தென்காசி மாவட்டத்தில் கோயில்கள் திறப்பு

தென்காசி மாவட்டத்தில் கோயில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்;

Update: 2021-07-05 04:30 GMT

தென்காசி விஸ்வநாதர் ஆலயம்

தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் இன்று முதல் கோயில்கள் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களான காசி விஸ்வநாதர் ஆலயம், குற்றாலநாதர் ஆலயம், திருவிலஞ்சி குமாரர் ஆலயம், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி ஆலயம், சங்கரன்கோவில் சங்கரலிங்கனார் ஆலயம், வாசுதேவநல்லூர் மத்தியஸ்தர் ஆலயம், கடையம் வித்திய பரமகல்யாணி ஆலயம், ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களும் பொதுமக்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டது.

ஏராளமான பொது மக்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News