காவல்கிணறு ஊராட்சியில் பாரம்பரிய உணவு திருவிழா
காவல்கிணறு ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு பாரம்பரியமிக்க உணவு திருவிழா நடைபெற்றது.
காவல்கிணறு ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு பாரம்பரியமிக்க உணவு திருவிழா மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின்படி நடைபெற்றது
நெல்லை மாவட்டம் காவல்கிணறு ஊராட்சியில் 40 மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இக்குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின்படி பாரம்பரியமிக்க உணவு திருவிழா நடத்த அறிவுரை அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்கிணறு ஊராட்சி அலுவலகத்தில் முதற்கட்டமாக 10 குழுக்கள் கலந்துகொண்ட உணவு திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் பண்டையகால பாரம்பரியமிக்க சத்தான பலவகைப்பட்ட உணவுப் பொருட்கள் இடம்பெற்றன. விழாவில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவி குழுவினர் ஆரோக்கியம் கொண்ட உணவு பொருட்களை தயார் செய்து பங்குபெற்றனர். விழாவிற்கு காவல்கிணறு ஊராட்சி தலைவர் இந்திரா சம்பு தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் மாம்பழ சுயம்பு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக காவல்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மேலாளர் ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திருவிழாவில் பங்குபெற்று பாரம்பரிய உணவு வகைகள் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிமாறப்பட்டது. சிறந்த முறையில் உணவுகளை தயாரித்து விநியோகம் செய்த முதல் மூன்று குழுக்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் மகளிர் குழு தலைவர் மாதவி பொருளாளர் ஜான்சிராணி உட்பட பலர் பங்குபெற்றனர்.