சங்கரன்கோவிலில் குடி போதையில் மருமகனை வெட்டி கொலை செய்த தாய்மாமன் கைது

மது அருந்தியபோது அன்பழகன் வைரமுத்து வின் தாயும் தனது சகோதரியுமான முத்துமாரியை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது;

Update: 2021-10-15 04:31 GMT
சங்கரன்கோவிலில் குடி போதையில் மருமகனை வெட்டி கொலை செய்த தாய்மாமன் கைது

கொலை செய்யப்பட்ட வைரமுத்து

  • whatsapp icon

சங்கரன்கோவிலில் குடி போதையில் மருமகனை  தாய்மாமன் வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2 ஆம் தெருவைச் சேர்ந்தவர்கள் அருணாச்சலம் - முத்துமாரி தம்பதியரின் மகன் வைரமுத்து. இவர் அப்பகுதில்  கூழ் கடை வைத்து நடத்தி வருகிறார்.  வைரமுத்து தனது  தாய்மாமன் குட்டி (எ) அன்பழகனுடன் சேர்ந்து தினமும் மது அருந்துவது வழக்கம்.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அன்பழகனும் வைரமுத்துவும்  வழக்கம் போல  மது அருந்தியபோது,  அன்பழகன்  வைரமுத்துவின் தாயும் தனது சகோதரியுமான முத்துமாரியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த வைரமுத்து அருகில் இருந்த கத்தியால் அன்பழகனை தாக்கியுள்ளார். அதைப் போல அன்பழகனும்  அரிவாளால் வைரமுத்துவை தாக்கியுள்ளார். இதில்  வைரமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் நகர் காவல்துறையினர், வைரமுத்துவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலையில் பலத்த காயமடைந்த அன்பழகனை, சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News