விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய 6 கேரள லாரிகள் பறிமுதல்: போலீசார் அதிரடி
அரசு விதியை மீறி அதிகமாக கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு சென்ற 6 லாரிகளை பணகுடி போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரசு விதியை மீறி பாரம் ஏற்றிய கனரக லாரிகள் பறிமுதல் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு சென்ற 6 லாரிகளை பணகுடி போலீசார் பறிமுதல் செய்தனர்.
இராதாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அரசு விதிகளை மீறி கேரளா விழிஞ்ஞம் பகுதிக்கு கனிமவளம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பணகுடி போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த கனரக லாரிகளை மடக்கி பிடித்து காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர் அதிக அளவு பாரம் ஏற்றிய கேரள பதிவுஎண் கொண்ட 6 லாரிகளை பணகுடி போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றன.