35அடி ஆழக் கிணற்றில் விழுந்த மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்
சங்கரன்கோவிலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆண் மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனியில் உள்ள கருத்தப்பாண்டியன் என்பவருக்கு சொந்தமான 35அடி ஆழக்கிணற்றில் ஆண் மயில் ஒன்று மேலே வர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது. தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற நிலைய அலுவலர் விஜயன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.