சங்கரன்கோவில்:காவல்துறை சார்பில் திருமண மண்டபம், பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்

சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் திருமண நிகழ்சிகளில் பிளக்ஸ் பிரிண்ட் செய்யவும், மண்டபங்களில் வைக்கவும் கூடாது – ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.

Update: 2021-07-17 14:15 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்கரன்கோவில் சரக காவல் துணை கண்காணிப்பாளர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் நகர காவல் ஆய்வாளர் ராஜா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நகர திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தில் நோய் தொற்று பரவும் அபாயத்தை கருத்தில்கொண்டு, அரசின் விதிமுறையை செயல்படுத்திட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் பிளக்ஸ் பிரிண்டிங் ஆப்செட் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் மண்டப உரிமையாளர்கள் தங்கள் மண்டபத்தின் முன்பு திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்தும் போது பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி இல்லை.

நிகழ்ச்சிகளின் போது 50 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது.

மண்டபத்தின் முகப்பு வாயிலில் சனிடைசர் உள்ளிட்ட நோய்த் தடுப்பு சாதனங்கள் வைக்கப்பட வேண்டும்.

பிளக்ஸ் போர்டு பிரிண்டிங் உரிமையாளர்கள் ஜாதி மத உணர்வை தூண்டும் படியான வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் பிரிண்ட் செய்து கொடுக்க கூடாது. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News