சங்கரன்கோவிலில் செம்மண் கடத்தல்
சங்கரன்கோவிலில் செம்மண் கடத்தி வந்த லாரி பறிமுதல். டிரைவர் தப்பியோட்டம்.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதிக்கு தர்மத்தூரணி என்ற கிராமத்தில் இருந்து செம்மண் ஏற்றி வந்த ஒரு லாரி வந்தது. அந்த லாரியை சங்கரன்கோவில் டவுண் காவல்துறையினர் சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் செம்மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய ஓட்டுனர் கருப்பசாமி என்பரை தேடி வருகின்றனர்