சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. ஆபீசில் கொள்ளை முயற்சி - பரபரப்பு

சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது குறித்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2021-11-01 08:00 GMT

கோப்பு படம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலத்தில்,  நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள்,  பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுனர். எனினும், இம்முயற்சி கைகூடவில்லை. இது குறித்து  தகவல் அறிந்த,  தாலுகா காவல்துறையினர்,  சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலத்தில் கொள்ளை முயற்சியில்,  பல இலட்சம் ரூபாய் பணம் மட்டுமின்றி, ஐந்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தப்பியதால் பணியாளர்கள் அனைவரும்  நிம்மதி அடைந்தனர். வட்டாரப்போக்குவரத்து அலுவலத்திற்கு அருகில்,  பள்ளி, முக்கியச்சாலை, எந்த நேரமும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து  உள்ள இடத்தில் கொள்ளை முயற்ச்சி நடைபெற்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News