புளியங்குடி அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 4 பேர் கைது: ரூ.2 லட்சம் அபராதம்

இது போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என வனத்துறை எச்சரித்துள்ளது

Update: 2021-10-06 15:30 GMT

தென்காசி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் பன்றி வேட்டையாடியதாக  வனத்துறையினரிடம் பிடிபட்டவர்கள்

தென்காசி மாவட்டம், புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பழங்களில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய நான்கு பேரை கைது செய்து அவர்களுக்கு இரண்டு லட்சம் அபராதம் விதித்து புளியங்குடி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் பழங்களில் நாட்டு வெடி குண்டு வைத்து, காட்டுப்பன்றியை வேட்டையாடுவதாக புளியங்குடி வனதுறையினருக்கு தகவல் கிடைத்தது.  அதன் பேரில் அங்கு சென்ற புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் முருகன்(27), ஈஸ்வரன், கணேஷ்குமார்(22), சுரேஷ்(21) ஆகிய நான்கு பேரை கைது செய்து வன உயிரின பாதுகாப்புச்சட்டத்தின் படி, அவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் வீதம் இரண்டு லட்சம் அபராதம் விதித்தனர்.  மேலும் அவர்களிடமிருந்து 80 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் .மேலும் இது போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர்கள் மீது கடுமையான தண்டனையின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று புளியங்குடி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News