சங்கரன்கோவிலில் புதிய விசைத்தறி கூட்டுறவு கடன் சங்கம் அமைப்பு

சங்கரன்கோவிலில் புதிய விசைத்தறி கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-06 09:15 GMT

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன் சார்பில்,  விசைத்தறி கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க வேண்டி அரசியல் கட்சிகளிடம் தேர்தலுக்கு முன்பாக மனு கொடுக்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் விசைத்தறி கூட்டுறவு கடன் சங்கம் அமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தலுக்கு பின்பு அரசு அமைந்த பிறகு, இது தொடர்பாக அரசுக்கு மனுக்கள் அனுப்பினர். இதற்கு பதிலாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையாளர் டாக்டர் பீலா ராஜேஷ், விசைத்தறி கூட்டுறவு கடன் சங்கத்தை மாவட்ட கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என தெரிவித்திருந்தார்.

அதன்படி,  சங்கரன் கோவிலில் புதிதாக விசைத்தறி கூட்டுறவு கடன் சங்கம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்,  மாஸ்டர் வீவர் சங்க கட்டிடத்தில், என் கே எஸ் டி சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி எஸ் ஏ சுப்பிரமணியன்,  புதிய விசைத்தறி கூட்டுறவு சங்கம் அமைப்பது பற்றி விரிவாக விளக்கிக் கூறினார்.

பின்பு,  புதிய விசைத்தறி கூட்டுறவு கடன் சங்கம் அமைப்பது என,  45 உறுப்பினர்கள் உறுப்பினர்களுக்கு மேல் ஒப்புதல் அளித்தனர். புதிய விசைத்தறி கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க,  தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி எஸ் ஏ சுப்பிரமணியனை கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டிலேயே விவசாய கூட்டுறவு கடன் சங்கம் என்றுதான் இருக்கிறது. இப்போதுதான் புதிதாக விசைத்தறி கூட்டுறவு கடன் சங்கத்தை அரசு ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News